வேலூர் காட்பாடி டி.கே.புரத்தைச் சேர்ந்த மின்வாரிய பணியாளர் தினகரன்(52) என்பவர் மனைவி சிவகுமாரி(44). இவர் ஓராண்டுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில் மனைவியை இழந்து பிருந்தா(14), பவித்ரா(16) ஆகிய தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், பிரிந்த தனது மனைவியான சிவகுமாரியின் நினைவை மறக்கமுடியாமல் தவித்து வந்துள்ளார். இதனையடுத்து தனது இரு மகள்கள் உட்பட அவரும் சேர்ந்து மன வேதனையில் நேற்று (மே30) இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அப்போது அதிர்ஷ்டவசமாக புடவை அறுந்து விழுந்ததில் மூத்த மகள் பவித்ரா மட்டும் உயிர் தப்பினார்.
உயிர் தப்பிய பவித்ராவின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பின், இருவரின் உடலையும் மீட்பதற்குள் பரிதாமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த விருதம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே தாயை இழந்த அந்த சிறுமி தற்போது, தனது தந்தையையும் உடன் பிறந்த சகோதரியையும் இழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடி நிதியை பிரதமர் மோடி வழங்கினார்!