ETV Bharat / city

மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தால் பெரும் பாதிப்பு: அரசு உடனே தலையிட வலுக்கும் குரல்! - நோயாளிகள் அவதி

வேலூர்: அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் வேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தால் மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
author img

By

Published : Oct 26, 2019, 11:53 AM IST

தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கி நடைபெற்றுவருகின்றது. தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்குதல், நோயாளிகளில் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அரசு மருத்துவர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் சுமார் 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தால் மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

டெங்கு காய்ச்சல் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு போன்றவற்றில் நோயாளிகள் பாதிக்கப்படாதவாறு நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இருப்பினும் பிற மருத்துவ பிரிவுகளில் பெரும்பாலான மருத்துவர்கள் நேற்று பணிக்கு வராததால் நோயாளிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

குறிப்பாக புறநோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சிகிச்சைப் பெற்றனர். மருத்துவர்களின் வேலைநிறுத்தம் நீடித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் உடனடியாக அரசு, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

Intro:வேலூர் மாவட்டம்

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் வேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதிBody:தமிழகம் முழுவதும்  மருத்துவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்குதல், நோயாளிகளில் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அரசு மருத்துவர்களின் பணி இடங்களை  நிரப்ப வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தாலுக்கா மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் சுமார் 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு  போன்றவற்றில் நோயாளிகள் பாதிக்கப்படாதவாறு நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இருப்பினும் பிற மருத்துவ பிரிவுகளில் பெருமான மருத்துவர்கள் இன்று பணிக்கு வராததால் நோயாளிகள் கடுமையாக அவதிப்பட்டனர் குறிப்பாக புறநோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்றனர் தொடர்ந்து மருத்துவர்கள் வேலை நிறுத்தம் நீடித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் உடனடியாக அரசு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.