ETV Bharat / city

ஆந்திராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் - எல்லையில் கரோனா சோதனைகள் தீவிரம் - ஆந்திராவில் ஒருவருக்கு ஒமைக்ரான்

ஆந்திர மாநிலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வேலூர் கிறிஸ்டியன் பேட்டையிலுள்ள தமிழ்நாடு - ஆந்திரா சோதனைச்சாவடியில் கரோனா சோதனையை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திராவில் ஒருவருக்கு ஒமைக்ரான்
ஆந்திராவில் ஒருவருக்கு ஒமைக்ரான்
author img

By

Published : Dec 14, 2021, 6:35 AM IST

வேலூர்: இந்தியாவில் தற்போது வரை 38 பேருககு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தலா ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திர - தமிழ்நாடு எல்லைப் பகுதியான வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கிரிஸ்டியன்பேட்டை சோதனைச் சாவடியில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஒரு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கிறிஸ்டியன் பேட்டை சோதனைச் சாவடியில் ஆந்திரா மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கு முன்னெச்சரிக்கை சோதனைகள் ஏதும் தற்போது வரை செய்யப்படவில்லை.

கரோனா தடுப்பு நடவடிக்கையின்போது ஏற்படுத்தப்பட்ட தீவிர பரிசோதனை நடைபெறவில்லை என்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் - ஆந்திரா எல்லையில் கரோனா சோதனை
வேலூர் - ஆந்திரா எல்லையில் கரோனா சோதனை

மேலும், ஆந்திராவிலிருந்து வரும் வாகனங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ஒமைக்ரான் காரணமாக பிரிட்டனில் முதல் மரணம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.