வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வரும் சூழலில், வேலூர் மத்திய சிறையில் மேலும் 5 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் 2 தண்டனை கைதிகள், 3 விசாரணை கைதிகளுக்கு என மேலும் 5 கைதிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மத்திய சிறை, கிளை சிறைகளை சேர்த்து 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.