ETV Bharat / city

கேரள மூத்த காங்கிரஸ் தலைவர் பி டி தாமஸ் காலமானார் - pt thomas death

கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில திருக்காட்கரை சட்டமன்ற உறுப்பினருமான பி டி தாமஸ் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் பி டி தாமஸ்
மூத்த காங்கிரஸ் தலைவர் பி டி தாமஸ்
author img

By

Published : Dec 22, 2021, 12:57 PM IST

வேலூர்: கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி டி தாமஸ் நெடுங்காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக சில மாதங்களுக்கு முன்பு வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (CMC) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முக்கிய தலைவர்

கேரள மாநிலத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான பி டி தாமஸ் 2016 முதல் எர்ணாகுளத்தில் உள்ள திருக்காட்கரை சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் பி டி தாமஸ்
மூத்த காங்கிரஸ் தலைவர் பி டி தாமஸ்

2009 முதல் 2014 வரை இடுக்கி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். இவரது மறைவிற்கு கேரள ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.