சென்னை : மத்தியக் குழு தமிழ்நாடு வந்து சென்ற பின்னர் தான் புயல் வெள்ள பாதிப்பு நிவாரண தொகை கிடைக்கும். பாலாற்றில் தண்ணீர் வீணாவதற்கு தடுப்பணைகளை அமைக்காமல் விட்டதே காரணம் என பாஜக மாநில பொதுசெயலாளர் கரு. நாகராஜன் வேலூரில் பேட்டியளித்தார்.
வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநகராட்சி, நகராட்சிகள் பேரூராட்சிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் பாஜகவினரிடமிருந்து விருப்பமனுக்களை பெறும் நிகழ்ச்சி, மாநில பொதுசெயலாளர் கரு. நாகராஜன் தலைமையில் இன்று (நவ.21) நடைபெற்றது. இதில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுக்களை அளித்தனர்.
ரூ.100 சிலிண்டர் என்னாச்சு?
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரு.நாகராஜன், பாஜகவின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து மாநிலம் முழுவது மனுக்கள் பெறப்படுகின்றன. இந்த மனுக்கள் வரும் 26 ஆம் தேதி வரையில் பெறப்படும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க திமுக அரசு முன் வரவில்லை. மூன்று ரூபாய் பெட்ரோல் விலையை குறைத்துவிட்டு ஏமாற்றுகிறது.
![BJP announces protest on Dec 30 against DMK government for not fulfilling election promises](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13697231_695_13697231_1637501713768.png)
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 ரூபாய் வழங்குவேன் என்று கூறினார்கள். அதனையும் வழங்கவில்லை. தமிழ்நாடு நிதி அமைச்சர் பொய் சொல்கிறார். தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனை கண்டித்து டிசம்பர் 3ஆம் தேதி முதல் போராட்டங்கள் நடைபெறும். தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறைக் கைதிகள் விவகாரம்
சிறைக் கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை சரியானது. அதற்கு மதச் சாயம் பூசக்கூடாது. விவசாயிகள் பயிர் காப்பீட்டுதிட்டத்தை மத்திய அரசு முழுமையாக நூறு சதவிகிதம் கடைபிடிக்கிறது. மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி முதல் 40 ஆயிரம் கோடி வரை விவசாயிகளின் பயிர் காப்பீடு திட்டங்களுக்கு செலவிடப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வீதம் நிவாரண நிதியும் வழங்கி வருகிறது. மத்தியக் குழு தமிழ்நாட்டில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு
சென்ற பின்னர் மத்திய அரசு நிதி வழங்கும்.
பாழாய் போகும் பாலாறு
தமிழ்நாட்டில் மாறிமாறி ஆண்ட அரசுகள் இலவசங்களை கொடுத்தார்கள் ஆனால், அணைகளை கட்டவில்லை. அணைகளை கட்டியிருந்தால் தண்ணீர் வீணாகி இருக்காது. முல்லை பெரியாறு அணையில் 110 அடிக்கு மேல் இருந்த தண்ணீரை தமிழ்நாடு அலுவலர்கள் திறந்துவிட்டார்கள் என்று நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொய் சொல்கிறார்.
![BJP announces protest on Dec 30 against DMK government for not fulfilling election promises](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-kpm-01-thirumukudal-heavy-flooded-dro-inspection-pic-vis-script-tn10033_20112021113855_2011f_1637388535_47.jpg)
இதையும் படிங்க : மீண்டும் பாமக வந்தால் மகிழ்ச்சி - பாஜக கரு. நாகராஜன்