மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள்விழா தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அரியலூர்:
இதன் ஒருபகுதியாக அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசினுடைய தலைமை கொறடாவான தாமரை ராஜேந்திரன் பேரணியாகச் சென்று பேருந்துநிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். அதனையடுத்து பேரணியில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
நாமக்கல்:
இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில், அம்மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் கலந்துகொண்டு எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார். அதன்பின் பெண்கள் பொங்கல் வைத்து எம்ஜிஆர் பிறந்தநாளைக் கொண்டாடினர்.
புதுக்கோட்டை:
எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட பழைய பேருந்துநிலையத்திலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம் மாலையணிவித்து மறியாதை செய்தார். இவ்விழாவில் ஏராளமான கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள எம்ஜிஆர் சிலைகளுக்கு அமமுக கட்சியினர், எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அவரின் பிறந்தநாளைக் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் அமமுக கட்சி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:எம்ஜிஆர் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய கட்சியினர்