வேலூர்: மத்திய அரசின் திட்டத்தின் மூலம் பயனடைந்த பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடம் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி, நேரடியாக பேசும் நிகழ்ச்சி இன்று நேற்று (மே31) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இதில் வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட பல அரசு அலுவலர்களும், விவசாயிகள் மற்றும் பயனர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசிக்கொண்டிருக்கும்போது, “இது நமக்கு புரியாது, பிரதமர் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்துபேசுகிறார். அது எதற்கு நமக்கு. அதேபோன்ற, பல திட்டங்கள் நமது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
மத்திய அரசு சார்பிலும் 12 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதை நான் உங்களுக்கு விரிவாகக் கூறுகிறேன் என்றார். இதைக் கூறிக்கொண்டே பிரதமர் பேசும் ஆடியோவை மியூட் செய்துவிட்டு தொடர்ந்து பேசினார். மேலும், வரும் 21ஆம் தேதி வேலூர் புதிய பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க வர உள்ளார்.
அப்போது மக்களிடம் மனுக்களைப் பெற்று அதற்கு தீர்வைத் தர இருக்கிறார் முதலமைச்சர் என்று கூறியுள்ளார். பிரதமரின் நிகழ்ச்சி முடிவின் இறுதிவரை பிரதமர் திரையில் பேசுவது ஆடியோ நிறுத்தப்பட்டிருந்தது. பிரதமர் காணொலி வாயிலாக நேரடியாக கலந்து கோண்டு பேசிய நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்பி ஆடியோ நிறுத்தி தானாக பேசியதால், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலர் முகச்சுளிப்புக்கு ஆளாகினர்.
இதையும் படிங்க: தேனி - மதுரை ரயில்: முதல் நாளே ரூ. 25 ஆயிரம் வருவாய்!