ETV Bharat / city

காவலர்களை ஆபாசமாகத் திட்டும் இளைஞர் - வைரல் காணொலி!

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை இளைஞர் ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டும் காணொலி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காவலர்களை ஆபாசமாக திட்டும் நபர்  வைரல் காணொலி  The person who obscenely scolds the guards  Viral Vieo
The person who obscenely scolds the guards
author img

By

Published : May 11, 2021, 7:29 AM IST

கரோனா தொற்று இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தமிழ்நாடு அரசு நேற்று (மே. 10) முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்தநிலையில், மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் ஆங்காங்கே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

காவலர்களை ஆபாசமாக திட்டும் இளைஞர்
சித்தூர் பேருந்து நிலையத்தில் காட்பாடி காவல்துறையினர் நேற்று முன்தினம் (மே.9) இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது மதுபோதையில் வந்த நபர் ஒருவர் திடீரென காவலர்களைப் பார்த்து ஆபாச வார்த்தைகளால் திட்டும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து காவல்துறையினரிடம் விசாரித்த போது, ஆபாச வார்த்தைகளால் பேசிய நபர் காட்பாடி வன்றந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் என்பதும். இவர் வழக்கறிஞராக உள்ளார் என்பதும் தெரியவந்தது. அவர் மீது வழக்கு எதுவும் பதியப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கிணறு அருகே மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் பிணமாக மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.