வேலூர் மாவட்டம் குருமலை மலை கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வந்தத் தகவலை அடுத்து அரியூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் துறையினர் கடந்த ஜூன் 9ஆம் தேதி அன்று சோதனையிட சென்றனர்.
தொடர்ந்து சாராய வியாபாரிகளான செல்வம், இளங்கோ ஆகியோர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கள்ளச்சாராய ஊறல்கள், அதற்குப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்கள் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 19) தலைமறைவாக இருந்துவந்த ஒருவரை வேலூர் கலால் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 'மேகதாது அணை விவகாரத்தில் கோட்டைவிட்ட தமிழ்நாடு அரசு' - ராமதாஸ்