வேலூர் மாவட்டம் காட்பாடி வண்டரந்தாங்கல் கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு திருவிழா நடைபெறும். இந்த முறை கோயில் திருவிழாவை முன்னிட்டு 60ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டு விழா கோலகலமாக நடைபெற்றது.
இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. இந்த மஞ்சுவிரட்டு விழாவில், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு ஒரு காளைக்கு மூன்று சுற்றுகள் விடப்படும்.
அதில் குறைந்த நிமிடத்தில் வருகின்ற காளைக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு 60 ஆயிரம், இரண்டாவது பரிசு 50 ஆயிரம், மூன்றாவது பரிசு 40 ஆயிரம் என மொத்தம் 35 பரிசுகள் இந்த மஞ்சுவிரட்டில் கொடுக்கப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டு விழாவைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வருகைதந்தனர்.
இதையும் படிங்க: