வேலூர் மாவட்ட ஆந்திர எல்லைப் பகுதியான வாணியம்பாடி அருகே கோரிப்பள்ளம், குடியாத்தம் அருகேயுள்ள சத்கார் என்ற மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக மதுவிலக்கு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று வேலூர் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையிலான காவல் துறையினர், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோரிப்பள்ளம் பகுதியிலிருந்து 1,600 லிட்டரும், சத்கார் பகுதியிலிருந்து 2,700 லிட்டர் என மொத்தம் 4,300 லிட்டர் கள்ளச்சாராயத்தைக் கண்டுபிடித்து அழித்தனர்.
மேலும் இது தொடர்பாக வாணியம்பாடி, குடியாத்தம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தப்பி ஓடிய குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.