ETV Bharat / city

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொகுதியில் பள்ளியின் அவலநிலை - infrastructure of government school

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதியான திருவெறும்பூரில் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அடிப்படை வசதிகளின்றி பராமரிப்பற்று உள்ளது. இதனையடுத்து பள்ளியைச் சீரமைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

author img

By

Published : Feb 3, 2022, 9:09 AM IST

Updated : Feb 3, 2022, 11:01 AM IST

திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 1970ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் இந்தப் பள்ளியில், தற்போதைய கல்வி ஆண்டில் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர்.

இந்தப் பள்ளியின் கட்டடங்கள் பல ஆண்டுகளாக முறையாகப் பராமரிக்கப்படாததால் தற்போது சிதிலமடைந்துள்ளன. ஊரடங்கு தளர்வுகளால் பள்ளி திறக்கப்பட்டு மாணவர்கள் வருகைபுரிந்து வரும் வேளையில் பள்ளியின் வகுப்பறையில், மின்விளக்கு, மின்விசிறி போன்ற அடிப்படை வசதி எதுவும் இல்லை.

அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

பள்ளியின் ஜன்னல் கம்பிகளை உடைத்து வகுப்பறைக்குள் புகுந்து மின் கம்பிகள், மின்சாதன பொருள்கள் ஆகியவற்றைச் சிலர் திருடிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் தரப்பில் காவல் நிலையம், துறை சார்ந்த அலுவலர்களுக்குப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலர் பள்ளி இல்லாத நேரங்களில் குடிநீர் தொட்டியில் நிரப்பப்பட்ட நீரை சுயதேவைக்குப் பயன்படுத்தி வீணடித்துவருவதாகவும் கூறப்படுகிறது. பள்ளியின் கழிவறையும் சுகாதாரமற்ற முறையில் உள்ளது.

ஆறாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் வகுப்பறைகளில் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் காற்றோட்டம், வெளிச்சம் இல்லாமல் கல்வி பயின்றுவருகின்றனர்.

பள்ளியின் வகுப்பறையின் தளங்கள், கதவுகள், ஜன்னல்கள் சிதிலமடைந்துள்ளதால், சில நேரங்களில் பாம்பு, தேள் போன்றவை வகுப்பறைக்குள் தஞ்சமடைவதாகக் கூறப்படுகிறது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதியில் உள்ள பள்ளி அவலநிலையுடன் காட்சியளிக்கிறது. பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு

Last Updated : Feb 3, 2022, 11:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.