ETV Bharat / city

வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட வலியுறுத்தல்!

author img

By

Published : Jun 23, 2019, 6:16 PM IST

திருச்சி: வெண்புள்ளி தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இன்று நடைபெற்ற அதன் விழிப்புணர்வு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

vitiligo awarness conference

இந்திய வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் இன்று தேசிய அளவிலான மாநாடு திருச்சி ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது. இதில் டாக்டர்கள் பிரவீன், செந்தாமரை, அலமேலு, வெங்கட்ராமன், திருவேங்கடம், செயலாளர் உமாபதி உட்பட பலர் உரையாற்றினர். மேலும், வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்களுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியும் நடந்தது.

இது குறித்து வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் செயலாளர் உமாபதி கூறுகையில், "வெண்புள்ளி தாக்குதல் என்பது நோய் கிடையாது. இது சிறிய அளவிலான குறைபாடு மட்டுமே! இந்த குறைபாட்டுக்கான சிகிச்சை முறையை தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

வெண்புள்ளிகள் குறித்து 11ஆம் வகுப்பு விலங்கியல் பாடத்தில் மட்டும் சிறிய அளவில் இடம் பெற்றுள்ளது, இதை அனைத்து பாடத்திட்டங்களிலும் இடம்பெற செய்ய வேண்டும். வெண்புள்ளிகள் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுவது கிடையாது, மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மருந்தை கண்டுப்பிடித்துள்ளது. இதனால் இந்த நடைமுறையை மாற்றி அவர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன" என்றார்.

வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்கள் ரணுவத்தில் சேர்க்கப்பட வலியுறுத்தல்!

Intro: திருச்சியில் தேசிய வெண்புள்ளிகள் விழிப்புணர்வு மாநாடு இன்று நடந்தது.

Body:திருச்சி: திருச்சியில் நடந்த தேசிய வெண்புள்ளிகள் விழிப்புணர்வு மாநாட்டில் சுயம்வரம் நடந்தது.
இந்திய வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் தேசிய அளவிலான மாநாடு இன்று திருச்சி ஜோசப் கல்லூரியில் நடந்தது. இந்த மாநாட்டில் டாக்டர்கள் பிரவீன், செந்தாமரை, அலமேலு, வெங்கட்ராமன், திருவேங்கடம், செயலாளர் உமாபதி, சேகர், குணசேகரன் ,கனிமொழி உட்பட பலர் கருத்துரையாற்றினர்.
இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக நவீன சுயம்வரம் நடத்தப்பட்டது. இதில் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்ட சுயம்வர நிகழ்ச்சி நடந்தது. இதில் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்ட ஆண்களும், பெண்களும் தங்களது திருமணத்திற்கு தேவையான விபரங்களை இந்த மாநாட்டில் தெரிவித்தனர்.
அவர்களின் விபரங்களை வரன் தேடுவோர் பெற்றுக் கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .
மேலும் இந்த மாநாட்டில் ஏற்கனவே இதே போல் நடந்த மாநாட்டில் சுயம்வரத்தில் கலந்து கொண்டு திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தங்களது அனுபவங்களை விளக்கி பேசினர். இந்த மாநாட்டில் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டோர் மற்றும் மருத்துவ கல்லூரி, மருந்தக கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாடு குறித்து இந்திய வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் செயலாளர் உமாபதி கூறுகையில்,
வெண்புள்ளி தாக்குதல் என்பது நோய் கிடையாது. இது சிறிய அளவிலான குறைபாடு மட்டுமே. இந்த குறைபாட்டுக்கான சிகிச்சை முறையை தமிழக அரசின் ஒருங்கிணைந்த முதலமைச்சர் காப்பீடு காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும். உலக அளவில் வெண்புள்ளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் மற்ற நோய்களுக்கான தினத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதனால் மத்திய, மாநில அரசுகள் இந்த நோய் தினத்தன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
வெண்புள்ளிகள் குறித்த 11ம் வகுப்பு விலங்கியல் பாடத்தில் மட்டும் சிறிய அளவில் இடம் பெற்று உள்ளது. இதை அனைத்து பாடத்திட்டங்களிலும் இடம்பெற செய்ய வேண்டும். வெண்புள்ளிகள் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ராணுவத்தில் சேர்ப்பது கிடையாது. வெண்புள்ளி தாக்குதலுக்கு உள்ளானவர்கள் i ராணுவத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார்.

Conclusion:வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.