திருச்சி பாலக்கரை எடத்தெருவில் பழைய கோவில் என்று அழைக்கப்படும் புனித ஜெபமாலை ஆலய நிர்வாகத்திற்கு சொந்தமான சேக்ஸ்பியர் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1993ஆம் ஆண்டு பயின்ற மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்தாருடன் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்து தங்களது மாணவப் பருவ நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த விழாவில் பள்ளியின் முதல்வர் தனசெல்வி ஜெயராணி, ஓய்வு பெற்ற ஆசிரியைகள் வேணு பேபி, நீம்மி, கிருஷ்டி, பியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களது குழந்தைகளுடனும், பெற்றோருடனும் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். இந்த விழாவில் முன்னாள் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'அதிமுகவினர் தியானம் செய்ய ஜெயலலிதா சமாதி போதிமரம் அல்ல!'