திருச்சி மாவட்டம் முசிறி பேருந்து நிலையம் பகுதியில் துறையூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கீழ், மணப்பாறை மற்றும் முசிறி காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகள் அடங்கும். இதற்கு லதா என்பவர் ஆய்வாளராக பதவியில் இருக்கிறார்.
இந்த நிலையில் இங்கு லஞ்சம் பெறப்படுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் அடிப்படையில், இன்று மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ராஜு தலைமையிலான அலுவலர்கள் மதுவிலக்கு பிரிவு அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. பணத்தைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் லதா உள்ளிட்ட அலுவலர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் பெற்ற பில் கலெக்டர் கைது...!