ETV Bharat / city

ஆடிப்போன மாவட்ட ஆட்சியர்.. என் பெயரிலேயே பண மோசடியா?

author img

By

Published : Jun 9, 2022, 1:14 PM IST

வாட்ஸ் அப்-களில் பரவி வந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலியான எண்களின் மூலம் பணம் பறிக்கும் கும்பலிடம் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் என யாரும் ஏமாந்து விடவேண்டாம் என்று ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் சிவராசு
ஆட்சியர் சிவராசு

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவின் பெயரில், அவரது புகைப்படத்துடன் பொதுமக்களையும், அரசு அலுவலர்களையும் ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்குடன் 6378370419 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் வங்கி கணக்கிலும், அமேசான் போன்ற செயலிகளில் ஆன்லைன் வாயிலாக கிஃப்ட் கார்டு உள்ளிட்டவற்றிற்கு பணம் செலுத்துமாறு கோரி செய்திகள் பரவின.

இவ்வாறு பொதுமக்களிடமும் அரசு அலுவலர்களிடமும் இருந்து பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கைள் ஆட்சியரின் கவனத்திற்கு சென்றதை அடுத்து அவர், இதுபோன்ற பண மோசடிகளில் சிக்கி யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதற்கு தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்செயலில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். எனவே, அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் மேற்கண்ட செல்பேசி எண் உள்ளிட்ட போலியாக உருவாக்கப்படும் வெவ்வேறு செல்போன் எண்கள் வாயிலாக பணம் கேட்பவர்களை முற்றிலும் புறக்கணித்து, உடனடியாக காவல்துறையில் புகார் தெரிவிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.100 உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.