ETV Bharat / city

ரவுடிகள் கலாசாரம் ஒழிக்கப்பட்டுள்ளது! திருச்சி டிஐஜி - திருச்சி

கரூர்: மேற்கு மண்டலத்தில் ரவுடிகள் கலாசாரத்தை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகக் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கரூரில் காவல் நிலையம் நூற்றாண்டு விழா
author img

By

Published : Jul 17, 2019, 5:05 PM IST

கரூர் பரமத்தி காவல் நிலையம் 1919ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நூற்றாண்டு கடந்து செயல்பட்டுவருகிறது. இதைச் சிறப்பிக்கும் வகையில் இன்று பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் திருச்சி சரக டிஐஜி கே. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கிவைத்தார். இதையடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

கரூரில் காவல் நிலையம் நூற்றாண்டு விழா

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன், "திருச்சி காவல் சரகத்தைப் பொறுத்தவரையில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தொடர் குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். அதேபோல் மணல் திருட்டு, மண் வளங்களைச் சுரண்டும் நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுவருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

Intro:மேற்கு மண்டலத்தில் ரவுடிசம் ஒழிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது திருச்சி மண்டல துணை தலைவர் பாலகிருஷ்ணன் பேட்டி
Body:கரூர் பரமத்தி காவல் நிலையம் 1919 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு நூற்றாண்டு கடந்து செயல்பட்டு வருவதை சிறப்பிக்கும் வகையில் இன்று பரமத்தி காவல் நிலையத்தில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் மரம் நடும் விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் காவல் நிலைய வளாகத்தில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவரும் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். பாண்டியராஜன், கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், அரவக்குறிச்சி டிஎஸ்பி அசோகன், கரூர் பரமத்தி காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் வேலுசாமி அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் திரு மேனி மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் நிலைய தலைமைக் காவலர் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சிக்கு அருகே காவல்துறை துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில்:

கரூர் மாவட்டம் பரமத்தி காவல் நிலையம் நூற்றாண்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

சட்டம் ஒழுங்கு போக்குவரத்து மேலாண்மை மூலம் கொலை கொள்ளை சாலை விபத்துக்கள் ஆகியவற்றை பொதுமக்கள் துணையுடன் கட்டுப் படுத்தி வருகின்றனர்.

திருச்சி காவல் சரகத்தை பொறுத்தவரையில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

ரவுடிசம் என்பது முழுமையாக ஒழிக்கப்பட்டு தொடர் குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல மணல் திருட்டு, மண் வளங்களை சுரண்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் மணல் திருட்டு, சட்டவிரோத மது விற்பனை, உள்ளிட்டவை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது .

இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் திருச்சி மண்டல காவல்துறை துணைத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.