ETV Bharat / city

'உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ-வாக ஆதரிப்போம்..!' - திருநாவுக்கரசர் - trichy congress mp

திருச்சி: "சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் எங்குப் போட்டியிட்டாலும், அவருக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும்", என்று திருச்சி மக்களவை காங்., உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர்
author img

By

Published : Jun 29, 2019, 10:55 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையில் நடைபெறும், நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசர், இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களவையில் அதிமுக உறுப்பினரைத் தவிர, பெரும்பாலான உறுப்பினர்கள் மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்துப் பேசினர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினர். இதேபோல் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மத்திய அரசிடம் குடிநீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க ஆயிரம் கோடி ரூபாய் நிதி வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்று அதிமுக எம்பி ரவீந்திரநாத் பேசியது தவறானதாகும்.

எதற்கெடுத்தாலும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சட்டம் என்று பாஜக மந்திரம் பாடிக் கொண்டிருக்கிறது. இது தேவையில்லாத விஷயம். அமமுக தேர்தலோடு முடிந்துவிட்டது. அக்கட்சியில் இருப்பவர்கள் பல்வேறு கட்சிகள் சென்று கொண்டிருக்கிறார்கள். தங்கதமிழ்செல்வன் திமுகவில் இணைந்தது குறித்து கருத்து கூற ஒன்றுமில்லை. நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. நாடு முழுவதும் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் விவசாயமும், மனிதர்களும் எதிர்காலத்தில் வாழ முடியும்.

எம்பி நிதியிலிருந்து திருச்சி மாநகராட்சிக்கும், புதுக்கோட்டை நகராட்சிக்கும் நீர் சேகரிப்பு வாகனங்கள், குடிநீர் விநியோகத்திற்காக வாங்கி கொடுக்கப்படும். மிகவும் வறட்சியில் உள்ள பகுதிகளில் அதன் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யலாம். உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்று நேரு கூறியது அவரது சொந்த கருத்து என்று அவரே கூறி விட்டார். கட்சி கருத்து அல்ல. கருத்துச் சொல்ல அவருக்கு உரிமை உள்ளது.

திருச்சி மக்களவை காங்., உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்கள் சந்திப்பு

நாங்குநேரி அல்லது வேறு எந்த தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டாலும், நாங்கள் ஆதரவு அளிப்போம். வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் மற்றும் மூன்று சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், இரு தொகுதிகளில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடுவதற்கான வாய்ப்புள்ளது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைமையிலான கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும், அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்’ எனக் கூறினார்.

Intro:திருச்சி நாடாளுமன்ற தொகுதி எம்பியும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான திருநாவுக்கரசர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Body:திருச்சி:
நாங்குநேரி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று திருநாவுக்கரசர் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை யில் நடைபெறும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், திருச்சி எம்பியுமான திருநாவுக்கரசர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக எம்பி.யை தவிர தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான எம்பிக்கள் தமிழகத்தில் இருக்கும் தண்ணீர் பஞ்சம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். இதேபோல் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மத்திய அரசை சந்தித்து குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க ஆயிரம் கோடி ரூபாய் நிதி வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்று அதிமுக எம்பி ரவீந்திரநாத் பேசியது தவறானதாகும்
நீதிபதிகள் நியமனம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. சமீபகாலமாக தனி வாரியம் மூலமாக நியமனங்கள் செய்யப்படுகிறது. இதேபோல் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு தனியாக குழு உள்ளது. இதில் மத்திய மாநில அரசுகள் தலையிடக்கூடாது. மக்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கையான இடம் நீதிமன்றம் மட்டுமே அதனால் அங்கு வரக்கூடிய நீதிபதிகள் நடுநிலையாளர்களாகவும், பாரபட்சம் இன்றி செயல்பட கூடியவராகவும் இருக்க வேண்டும்.
நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு என்பது சாத்தியமில்லாத விஷயம். உள்ளூர் ரேஷன் கடைக்குள் மாற்றி வாங்கிக்கொள்ளும் முறையை ஏற்படுத்தலாம். மாநிலம் விட்டு மாநிலம் மாறி வாங்கிக் கொள்ளலாம் என்பது சாத்தியமில்லாத விஷயம். எதற்கெடுத்தாலும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சட்டம் என்று பாஜக மந்திரம் பாடிக் கொண்டிருக்கிறது. இது தேவையில்லாத விஷயம். அமமுக தேர்தலோடு முடிந்துவிட்டது. அக்கட்சியில் இருப்பவர்கள் பல்வேறு கட்சிகள் சென்று கொண்டிருக்கிறார்கள் தங்கதமிழ்செல்வன் திமுகவில் இணைந்தது குறித்து கருத்து கூற ஒன்றுமில்லை. நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. நாடு முழுவதும் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் விவசாயமும், மனிதர்களும் எதிர்காலத்தில் வாழ முடியும்.
எம்பி நிதியிலிருந்து திருச்சி மாநகராட்சிக்கும், புதுக்கோட்டை நகராட்சிக்கும் டேங்கர் லாரிகள் குடிநீர் விநியோகத்திற்காக வாங்கி கொடுக்கப்படும். மிக வறட்சி உள்ள பகுதிகளில் அந்த லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யலாம். உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்று நேரு கூறியது அவரது சொந்த கருத்து என்று அவரே கூறி விட்டார். கட்சி கருத்து அல்ல என்று அவர் கூறி விட்டதால் அது குறித்த கேள்வி தேவையில்லை. கருத்து சொல்ல அவருக்கு உரிமை உள்ளது. கட்சித் தலைமை தேர்தல் நேரத்தில் முடிவு செய்து சீட் ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும். உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு நடத்துமா என்பதே சந்தேகமாக உள்ளது. தேர்தல் நடத்த அதிமுக தயாராக இல்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பேசி இடங்களை பகிர்ந்து கொள்ளும். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. நான் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றதாக கூறியது கிடையாது. ஆனால் இத்தகைய கருத்துக்கள் தவறாக பரப்பப்படுகிறது. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் வேலை பார்த்ததால் நான் வெற்றி பெற்றேன். இந்த தேர்தலில் திமுக பெரிய கட்சி என்பதால் அதன் பங்கு அதிக அளவில் இருந்தது. இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். திமுக சார்பில் நாங்குநேரி அல்லது வேறு எந்த தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டாலும் நாங்கள் ஆதரவு அளிப்போம். வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் மூன்று சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் இரு தொகுதிகளில் திமுகவும், ஒரு தொகுதி நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. அது குறித்து பேசி முடிவு செய்யப்படும் என்றார்.

Conclusion:நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைமையிலான கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும், அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.