ETV Bharat / city

வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியவர் கைது - corona rumour news in trichy

திருச்சி: கரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி: கரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை  சமூக வலைதளத்தில் பரப்பியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

author img

By

Published : Mar 29, 2020, 5:27 PM IST

Updated : Mar 29, 2020, 6:25 PM IST

தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள பல்வேறு துறைகளில் இருந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல பொதுமக்களும் கரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருச்சி அருகே உள்ள நல்லபொன்னம்பட்டியைச் சோ்ந்த அழகப்பன் என்பவர் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அப்பகுதியைச் சோ்ந்த ஓருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாகவும், அதனால் சுற்றுவட்டார பொதுமக்கள் புத்தாநத்தம் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வதந்தியை பரப்பி உள்ளார்.

இதையடுத்து அழகப்பனை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: ஈரான் நாட்டின் தனி தீவில் தவிக்கும் தமிழ்நாடு மீனவர்கள் - வெளியான வாட்ஸ் ஆப் வீடியோ

Last Updated : Mar 29, 2020, 6:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.