ETV Bharat / city

கட்டுப்பாடுகளுடன் நடந்த குரூப்-1 தேர்வு - மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு - காஞ்சிபுரம் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு

கரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு இன்று (ஜன.03) நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 2.57 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதினர்.

tnpsc
tnpsc
author img

By

Published : Jan 3, 2021, 7:51 PM IST

Updated : Jan 3, 2021, 7:58 PM IST

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 66 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு ஏப்ரல் 5-இல் நடக்கவிருந்த குரூப்-1 முதல்நிலை தேர்வு கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. கோட்டாட்சியர், வணிகவரி உதவி ஆணையர், தீயணைப்பு அலுவலர் போன்ற பதவிகளுக்காக நடைபெற்ற இத்தேர்வில், 2.57 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

தேர்வர்கள் 9.15 மணிக்கே தேர்வு மையத்திற்கு வரவும், கறுப்பு நிற பேனா மட்டுமே பயன்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டது. குறிப்பாக தேர்வு அறைக்குள் நுழைந்தவுடன் தேர்வர்கள் தங்கள் கைரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

விடைத்தாளில் தெரியாத கேள்விகளுக்கு 'E' கட்டத்தை குறிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. குரூப்-1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மூன்று தாள்கள் உள்ளடக்கிய மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு 36 மையங்களில் நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்து 765 தேர்வர்கள் தேர்வு எழுதினர். திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள வாசவி வித்யாலயா பள்ளியில் நடந்த இந்த தேர்வை ஆட்சியர் சிவராசு ஆய்வு செய்தார். குரூப்-1 தேர்வுக்கு 36 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தேர்வை கண்காணிக்க துணை ஆட்சியர் தலைமையில் நான்கு பறக்கும்படை நியமனம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக தேர்வர்களுக்கு கிருமி நாசினி மற்றும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 20 தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில், 8 ஆயிரத்து 973 தேர்வர்கள் தேர்வு எழுதினர். அதியமான் கோட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையம், நல்லம்பள்ளி பகுதியில் உள்ள விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி என இரண்டு தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தேர்வு மையத்தில் ஆய்வு

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 13 மையங்களில் நடைபெற்ற குருப் - 1 தேர்வில் 2457 நபர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். தேர்வு எழுத வந்தவர்கள் முழு பரிசோதனைக்கு பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்தில் தேர்வர்களின் வசதிக்காக அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.

கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் 5 ஆயிரத்து 440 பேர் எழுதினர். தேர்வுகளை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்கப்பட்டிருந்தது. இந்துக்கல்லூரி, புனித சிலுவை கல்லூரி, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வுமையங்களில் ஆட்சியர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி தேர்வு மையத்தில் சரியாக காலை 9.15 மணிக்கு தேர்வு அலுவலர்களால் கதவு மூடப்பட்டது. சிறு மணித்துளிகள் காலதாமத்துடன் வந்த தேர்வர்களுக்கு கூட அனுமதி மறுத்து அவர்கள் திருப்பி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. பல மாதங்களாக படித்து தேர்வுக்கு செலவழித்த மாணவர்கள் சில நிமிடங்கள் தாமதமானதால் தேர்வு எழுத முடியாமல் வேதனையுடன் திரும்பி சென்றனர்.

காலதாமதமாக வந்ததால் தேர்வு எழுத முடியாமல் வெளியே காத்திருக்கும் தேர்வர்கள்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நடைபெற்ற குரூப்-1 தேர்வில் ஆயிரத்து 285 தேர்வர்கள் தேர்வு எழுதினர். சில தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேரில் சென்று பார்வையிட்டார். 8 தேர்வு மையங்களிலும் கோவிட்-19 தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தேர்வு எழுத வரும் அனைத்து தேர்வர்களுக்கும் காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து அனுமதித்திட ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் தலா ஒரு அரசு மருத்துவர் தலைமையில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா ஆய்வு

இதையும் படிங்க:புதிய விதிமுறைகளுடன் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தொடக்கம்!

Last Updated : Jan 3, 2021, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.