ETV Bharat / city

திருச்சி அருகே 30 மயில்கள் கொன்று குவிப்பு - அதிர்ச்சியில் வனத்துறை

திருச்சி அருகே வயல் ஓரத்தில் மர்மமான முறையில் 30க்கும் மேற்பட்ட மயில்கள் உயிர் இழந்து கிடந்தன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி அருகே 30 மயில்கள் கொன்று குவிப்பு

author img

By

Published : Dec 26, 2021, 6:38 AM IST

திருச்சி: துறையூர் அடுத்த மாராடி கிராமத்திலிருந்து கட்டப்பள்ளி செல்லும் வழியில் சறுக்குபாலம் மற்றும் ஐயாறு ஓடை அருகே சுமார் 30க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடப்பதாக, மாராடி ஊராட்சி மன்றத் தலைவர் செல்லதுரை, இந்திய விலங்குகள் நல வாரிய மாநில அலுவலர் இளங்கோவனுக்கு தகவலளித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இளங்கோவன், வனத்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து வனக்காவலர் மற்றும் வனச்சரக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

மயில்களுக்கு பிரேதப் பரிசோதனை

அதில் பெரும்பாலான மயில்கள் இறந்து அழுகிய நிலையில் வயல் ஓரங்களில் கிடந்தது. இறந்து கிடந்த மயில்களில், சிலவற்றைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சோபனபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

பெரும்பாலான மயில்கள் அழுகிய நிலையில் இருந்ததால் அவற்றை பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் ஓடுவதால், பல மயில்களின் உடல்கள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம்.

இதனால் சுமார் 50 மயில்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

திருச்சி அருகே 30 மயில்கள் கொன்று குவிப்பு
திருச்சி அருகே 30 மயில்கள் கொன்று குவிப்பு

மயில்களுக்கு விஷம்?

மேலும், சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் நெல் நடவு செய்துள்ளதாலும், தற்போது கதிர் விடும் பருவம் என்பதால் நெற் பயிர்களை காப்பதற்காக மயில்களுக்கு விஷம் வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பகுதியில் 50க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், வயல்வெளியில் உள்ள நெற்கதிர்களை மயில்கள் கூட்டமாகச் சென்று உட்கொள்வது வழக்கம். தற்போது அறுவடை நெருங்கும் சமயத்தில் வயல்வெளியில் முகாமிட்டிருந்த மயில்கள் நெற்கதிர்களை உணவாக உண்டதாகக் கூறப்படுகிறது.

மயிலின் சிறப்புத் தன்மை

குறிப்பாக ஒரு நெல் மணி கூட கீழே விழாமல் அதை கதிரோடு எடுத்து உண்ணக் கூடிய தன்மை மயில்களுக்கு உண்டு. இதனால் வயல்களில் பெரும் நஷ்டம் ஏற்படும்.

பொதுவாக மயில்களிடமிருந்து நெற்கதிர்களை பாதுகாக்க, வழக்கமாக அங்கும் இங்குமாக குருணை வைத்துக் கொல்லும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

இந்த வகையில் தற்போது திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மயில்கள் கொத்துக்கொத்தாக மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் மயில்களுக்கு யாரேனும் விஷம் வைத்து கொன்றார்களா என்ற ரீதியிலும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: Earth quake at vellore:வேலூர் அருகே அடுத்தடுத்து நில அதிர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.