திருச்சி: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலைய ஊர்க்காவல் படை வீரரான சேர்ந்த ராக்கேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
சிறுகனூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, திடீரென காரின் முன் பகுதியில் புகை கிளம்பியது. இதனைக் கவனித்த ராகேஷ் காரை நிறுத்தி என்னவென்று பார்ப்பதற்குள் காரில் தீ மளமளவென பரவத் தொடங்கியது.
இருப்பினும் காரில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 6 பேர் லேசான காயங்களுடன் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் தீயணைப்பு துறையினர் காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
இருப்பினும், கார் தீயில் கருகி முழுவதும் நாசமாகியது. கார்கள் தீப்பிடித்து விபத்துக்கள் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து வாகன ஓட்டிகள் அறிவது அவசியம் ஆகும்.
இதற்கிடையில், ”ரேடியேட்டரில் பேன் சரியாக இயங்குகிறதா? தண்ணீர் இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்” என்றார் மெக்கானிக் செல்வராஜ். மேலும், கார் தீ விபத்தில் இருந்த தப்பிக்க அவர் சில யோசனைகளையும் வழங்கினார்.
இதையும் படிங்க: டெண்டர் முறைகேடு வழக்கு: மேயர்களையும், அலுவலர்களையும் சேர்க்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்