திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு பகுதியில் குட்கா பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தனிப்படை போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள மளிகைக்கடை உரிமையாளர் பெருமாள்ராஜ் மகன் பாலன்(29) என்பவரது வீட்டில் சுமார் 43 மூட்டைகளில் குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பாலனை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வைரல் வீடியோ...வடமாநில இளைஞரை இரும்பு கம்பியால் தாக்கும் சைக்கோ மனிதன்...