திருச்சி: துறையூர் பேருந்து நிலையத்திலுள்ள தனியார் தங்கும் விடுதியில் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரும், தாம்பரம் பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்மணியும் திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்டனர்.
கடந்த 23ஆம் தேதி அப்பெண்ணின் கணவர், தன் மனைவியைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இருவரது உடல்களையும் கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: Suicide Prevention: அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுப்பது எப்படி?