ETV Bharat / city

எம். புத்தூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா - திருச்சி செய்திகள்

முசிறி அருகே எம். புத்தூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேக விழா
author img

By

Published : Feb 7, 2022, 2:22 PM IST

திருச்சி: தொட்டியம் வட்டம் எம். புத்தூர் ஊராட்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் காட்டுப்புதூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா (பிப்ரவரி 7) இன்று சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக, காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தப்பட்டு கணபதி, லட்சுமி, நவகிரக பூஜைகள் சிறப்பாகச் செய்யப்பட்டன.

மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

பின்பு, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. மகா மாரியம்மன், விநாயகர், கருபண்ணசுவாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. இதன் பின்னர் மகா தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.

இதில் எம். புத்தூர், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பக்தர்கள், பெண்கள் திரளாகக் கலந்துகொண்டனர். விழாவையொட்டி, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: முருகன் கோயிலில் நெரிசலில் நடைபெற்ற 29 திருமணங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.