திருச்சி: ஸ்ரீசந்திரசேகரேஸ்வரர் ஸ்ரீஏகவீராம்பாள் ஆலயத்தில் அஷ்டமி செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
இப்படி ஒரு தாயின் கோயிலைப்பற்றி கேட்டு இருக்கிறீர்களா?ஆம். கேட்டிருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் ஏன் பாரதத்திலேயே ஏகவீராம்பாளுக்கு என்று தனிக்கோயில் கிடையாது. ஆனால், திருச்சி மாவட்டம் திருவானைக்கோயில் பகுதியில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.
மூலம் என்ன: ஜமதக்கனி மனைவியும் பரசுராமரின் தாயாருமான ரேணுகாதேவிவின் சொரூபமாகிய ஸ்ரீ ஏகவீராம்பாள் ஆலயம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோயிலை ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதிகள் சுவாமிகள், ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஜயேந்திர சுவாமிகள் ஆகியோரின் வழிகாட்டுதல்படி 2004ஆம் ஆண்டு புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் 2011ஆம் ஆண்டு சில திருப்பணிகளும் மடப்பள்ளியும் அமைக்கப்பட்டது. தற்பொழுது வரையில் இக்கோயிலில் தினமும் இரண்டுகால பூஜைகள் நடைபெறுகின்றன.
விசேஷச நாட்கள் எவை: ஆண்டிற்கு ஒருசில முறை அல்லது இரண்டுமுறையே வரும் அஷ்டமி திதியுடன் கூடிய செவ்வாய்க்கிழமை ஸ்ரீ ஏகவீராம்பாளுக்கு மிகவும் உகந்த நாள்.
பலன்கள்: அம்பாளுக்கு தேன் கலந்த பேரீட்சை பழத்தால் அபிஷேகம் செய்வதுடன் ஸ்ரீ ஏகவீராம்பாள் அஷ்டகத்தை 48 நாட்கள் (1 மண்டலம்) படித்து வருவதன் மூலம் பேச்சில் குறைபாடு உள்ளவர்களுக்குத் தீர்வு கிடைக்கும். அத்தோடு கடன் தொல்லைகள் அகலும். நோய்கள் நம்மை அண்டாது என்பது ஐதீகம்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த இத்திருக்கோயிலில் இன்று (ஜூன் 7) மாலை முதலில் ஸ்ரீசந்திரசேகரேஸ்வர் சுவாமிக்கு 5.00 மணிக்கும், ஶ்ரீ ஏகவீராம்பாளுக்கும் மாலை 6.00 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.
கோயில் இருக்கும் இடத்தை அறிய:
ஸ்ரீ சந்திரசேகரேஸ்வரர் ஸ்ரீ ஏகவீராம்பாள் ஆலயம், திருச்சி.
https://www.google.com/maps/search/?query=Ekaveerammbal+Temple&query_place_id=ChIJTZ_kfi70qjsRmR86YWbgoko&api=1&hl=en
இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம்