திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகேயுள்ள வெ.கரட்டுப்பட்டியை சேர்ந்த அரசகவுண்டர் என்பவரின் 16 வயது மகள், அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். இவர், நேற்று அதே பகுதியில் உள்ள வயலில் தனியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் மாணவியின் வாயை பொத்தியபடி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதனால் பதறிபோய் கூச்சலிட்ட மாணவியின் தலையில் கல்லை வைத்து தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்த மாணவியை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனையடுத்து மாணவி கூறிய அங்க, அடையாளங்களின் அடிப்படையில் அணியாப்பூர் சந்தைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவரின் மகன் சுரேஷ்(24) என்பவனை பிடித்து தர்ம அடிகொடுத்து வையம்பட்டி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் மாணவி அளித்த தகவலின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:பாலுறவுக்கு கூப்பிட்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பெண்: வைரல் காணொலி!