திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புத்தாநத்தம் கடைவீதியில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு, காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கிடவும், ஊரடங்கின் பெயரால் நடக்கும் அத்துமீறல்களை நிறுத்த வேண்டும் என்றும், இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள முத்தலாக் தடை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தினர்.
மேலும், அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழாவைக் கண்டித்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பேரழிவை கரோனாவால் மூடி மறைக்கக் கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு குழந்தைகள் உள்பட14 பேர் மீது புத்தாநத்தம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.