ETV Bharat / city

திருச்சியில் திருப்பம்..! செக் நேருவுக்கா? மகனுக்கா?

திருச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி என இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வரும் நிலையில், திருச்சி சிவாவின் வருகை திகிலை கிளப்பி இருக்கிறது.

திருச்சி அரசியல்
திருச்சி அரசியல்
author img

By

Published : Jun 7, 2022, 7:16 PM IST

Updated : Jun 7, 2022, 7:50 PM IST

திருச்சி: திமுக முன்னாள் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவின் 69-வது பிறந்தநாள் மே மாதம் 15-ம் தேதி என்றாலும் பெரும்பாலும் கொண்டாட மாட்டார். ஆனால் கடந்த மாதம் நடந்த விழாவில் கறிவிருந்துடன் சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாட்டப்பட்டது. நாடாளுமன்றத்தில் திமுகவின் முகமாக அறியப்படுபவர் திருச்சி சிவா.

திமுகவின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான இவர், சிறந்த எழுத்தாளரும், இலக்கியவாதியுமாக திகழ்கிறார். தொடர்ச்சியாக 5 முறை மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தேசிய அளவில் கட்சிகளை தாண்டி, பிரதமர் உள்ளிட்ட அனைவரிடமும் நல்ல நட்புறவை பேணி வருபவர். திமுகவில், கல்லூரி பருவத்தில் இணைந்த இவர், எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்ட, 1976-ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்றவர். அதனால், அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியின் நன்மதிப்பை பெற்றார்.

திருச்சி சிவா
திருச்சி சிவா

அதைத் தொடர்ந்து திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர், திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் என அக்கட்சியில் தொடர்ச்சியாக பல்வேறு பதவிகளைப் பெற்றார். தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மிக முக்கிய அடையாளமாக விளங்கியது, திமுக இளைஞரணி. அந்த திமுக இளைஞரணியை உருவாக்கிய ஐவரில் ஒருவர் திருச்சி சிவா. அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலினின் நெஞ்சுக்கு நெருக்கமானவராக இருக்கிறார்.

தற்போது, திமுக கொள்கை பரப்பு செயலாளராகவும், திமுக மாநிலங்களவை குழுத் தலைவராகவும் இருக்கிறார். கடந்த, 25 ஆண்டுகளாக டெல்லி அரசியலை மையப்படுத்தியே இவரது செயல்பாடுகள் இருந்தன. டெல்லியில் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து உரையாடுவது, மாநிலங்களவையில் திமுக தரப்பு வாதங்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பது, கட்சித் தலைமை அறிவுறுத்தும் வேலைகளை டெல்லியில் கனகச்சிதமாக செய்து முடிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் திருச்சி சிவாவின் மகன் பாஜகவிற்கு சென்ற நிலையில் உள்ளூர் அரசியலில் முன்னெப்போதும் பெரிதாக ஈடுபாடு காட்டாதவர் தனது, 69-வது பிறந்தநாள் கொண்டாட்டம் மூலம், சில அதிரடி அரசியல் சமிக்கைகளை வெளிக்காட்டி இருக்கிறார். திருச்சியில் நடந்த திருச்சி சிவாவின் பிறந்தநாள் விழா வழக்கத்துக்கு மாறாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவரது வீடு அமைந்துள்ள கன்டோன்மென்ட் ஸ்டேட் பாங்க் ஆபிசர்ஸ் காலனிக்கு செல்லும் வழியெங்கும் தோரணங்கள், வாழை மரங்கள், கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

வாழ்த்து போஸ்டர்கள் மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. சிவா வீட்டின் முன்பு, 2 மேடைகள் அமைக்கப்பட்டு ஒன்றில் கட்சியினர் சிவாவை நேரில் வாழ்த்துவதற்கும், மற்றொன்றில் கலைநிகழ்ச்சி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு அருகிலேயே பெரிய பந்தல் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு ஆட்டுக்கறி பிரியாணி, கோழிக்கறி வறுவல், அவித்த முட்டை என்று தடபுடல் விருந்தும் அளிக்கப்பட்டது.

ஏற்கனவே திருச்சியில் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி என இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வரும் நிலையில் திருச்சி சிவாவின் வருகை திகிலை கிளப்பி இருக்கிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, மாநகராட்சி மண்டலக் குழு தலைவர் மதிவாணன், கவுன்சிலர் ரமேஷ் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் திருச்சி சிவாவை நேரில் வந்து வாழ்த்தினர். ஆனால், மூத்த அமைச்சர் கே.என்.நேரு, சிவாவுக்கு வாழ்த்துச் சொல்ல வரவில்லை.

மாலையில், மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஓட்டலில், இலக்கிய வட்ட நண்பர்கள் சார்பில், திருச்சி சிவாவின் பிறந்த நாள் இலக்கிய விழாவாக நடத்தப்பட்டது. இதில் திமுகவினர் மட்டுமின்றி, கவிஞர்கள் முத்துலிங்கம், அறிவுமதி, நெல்லை ஜெயந்தா, திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி, நடிகர் போஸ் வெங்கட் மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்பினர், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பாஜகவில் இணைந்ததால் மகனுக்கு பதிலடி கொடுக்க என ஒரு தரப்பும், அன்பில் மகேஷ்க்கு ஆதரவாகவும் அவரை வளர்த்துவிடவும் 25 ஆண்டுகளாக கோலோச்சிக்கொண்டு இருக்கும் நேருவை ஓரம் கட்டவும் களமிறக்கப்பட்டிருக்கிறார் என்று ஒரு தரப்பும் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அரசியலுக்கு திருப்புமுனை என்றால் அது திருச்சி, இங்கு என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: 'எங்களுக்கும் பாய தெரியும்' - மதுரை ஆதீனத்திற்கு சேகர் பாபு பதிலடி

Last Updated : Jun 7, 2022, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.