ETV Bharat / city

"சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி ஸ்டாலினை தோற்கடிப்பார்" -அர்ஜூன் சம்பத் நம்பிக்கை! - இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத்

திருச்சி: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி தனித்து போட்டியிட்டு ஸ்டாலினை தோற்கடிப்பார் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் நம்பிக்கைப்படத் தெரிவித்தார்.

Rajinikanth defeats Stalin in Assembly election -Arjun Sampath
author img

By

Published : Sep 19, 2019, 10:21 PM IST

இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், தமிழ்நாட்டில் இந்திப் படிக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகள் முன்பு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சி திட்டமிட்டிருந்ததை அறிந்த ஸ்டாலின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மாற்றி அமைத்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பு..!

மேலும் பேசிய அவர், ரஜினி நிச்சயம் அரசியல் கட்சியைத் தொடங்கி ஆன்மிக அரசியலை மேற்கொள்வார் என்றும்; வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி தனித்துப் போட்டியிட்டு ஸ்டாலினை தோற்கடித்து ஆட்சி அமைப்பார் எனவும் அர்ஜூன் சம்பத் நம்பிக்கைப்படத் தெரிவித்தார்.

இதையும் படிக்க...தமிழ்நாடு இளைஞர்களுக்கே தமிழ்நாட்டில் வேலையில்லையா? - ஸ்டாலின்

Intro:இந்து மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.

Body:திருச்சி:
ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு முன்பு இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நாங்கள் அறிவித்ததால் தான் ஸ்டாலின் போராட்டத்தை வாபஸ் பெற்றார் என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.
இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் இந்தி படிக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகள் முன்பு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சி திட்டமிட்டிருந்தது. நாங்கள் நடத்த இருந்த போராட்டம் தெரிந்தவுடன் தான் ஸ்டாலின் நடத்தவிருந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மாற்றி அமைத்துள்ளார். ஆனால் அமித்ஷா கூறிய விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அவர் வாபஸ் பெற்றதாக தெரிவித்துள்ளார். இது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக தான் உள்ளது.
ஸ்டாலினை அழைத்துப் பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை. தமிழகத்தில் மும்மொழி திட்டம் கொண்டு வர வேண்டும். நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும். இதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5ம் வகுப்பு வரை பள்ளிகளில் தமிழ் வழியில் மட்டுமே கல்வி போதிக்க வேண்டும். பிற மொழிகளில் கல்வி போதிக்க கூடாது. 5ம் வகுப்புக்கு மேல் மும்மொழி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடுகள் பயணம் செய்வது வரவேற்கத்தக்கது. நீர் மேலாண்மைத் திட்டங்களை பார்வையிடுவதற்காக இஸ்ரேல் செல்கிறார். ஆனால் மதவாதிகளும், ஜாதிய வாதிகளும் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை குறிவைத்து இஸ்ரேலை எதிர்க்க வேண்டும் என்று நினைத்து முதல்வரின் பயணத்தை விமர்சனம் செய்கிறார்கள்.
முதலமைச்சரின் இஸ்ரேல் பயணத்திற்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது. இந்தி திணிப்பை ரஜினி மட்டுமல்ல நாங்களும் எதிர்க்கிறோம். ஆனால் இந்தியை படிக்க விரும்புகிறோம். அமித்ஷா தாய்மொழியில் யாரும் பயில வேண்டாம் என்று கூறவில்லை. அவரது கருத்து திரித்து வெளியிடப்பட்டுள்ளது. ரஜினி நிச்சயம் அரசியல் கட்சியைத் தொடங்கி ஆன்மீக அரசியலை மேற்கொள்வார். வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி தனித்துப் போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பார். ஸ்டாலினை தோற்கடித்து ரஜினி ஆட்சி அமைப்பார் என்றார்.

Conclusion:வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பார் என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.