ETV Bharat / city

மணப்பாறையில் பணமோசடி: பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்

மணப்பாறை அருகே சீட்டு பணத்தை மோசடி செய்த, சீட்டு நிறுவன உரிமையாளர்களைக் கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உரிமையாளர்களை கைது செய்யக்கோரி
உரிமையாளர்களை கைது செய்யக்கோரி
author img

By

Published : Nov 22, 2021, 11:39 AM IST

திருச்சி: மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் செந்தில் கணேஷ், தேக்கமலை, தீனதயாளன் ஆகியோர் கூட்டாக இணைந்து 'செந்தில் கணேஷ் சிட்பண்ட்ஸ்' என்ற பெயரில் சீட்டு நிறுவனம் ஒன்றை நடத்திவந்தனர். இந்நிலையில், கடந்த ஓராண்டிற்கு முன்பு சீட்டு நடத்திய பணத்தை எடுத்துக்கொண்டு அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த பணம் செலுத்தியவர்கள், சீட்டு நிறுவன உரிமையாளர்களைக் கைதுசெய்து பணத்தை மீட்டுத் தரக்கோரி, வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்தப் புகாரின் மீது ஓராண்டிற்கு மேலாகியும் காவல் துறையினர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், சீட்டு நிறுவன உரிமையாளர்கள் இதே பகுதியில் உலாவிவருவதை தாங்கள் நேரில் கண்டதாகக் கூறி, உடனடியாக அவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என வையம்பட்டி காவல் நிலையம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜனனிபிரியா பொதுமக்களிடம், நடவடிக்கை எடுத்து மோசடி செய்தவர்களைக் கைதுசெய்வதாக உறுதியளித்தார்.

இதனையடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனர். மேலும், இந்தச் சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:TN Heavy rain: தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.