இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 13) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, பாதிக்கப்பட்ட பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு அரசு மாதம்தோறும் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் சார்பில் மாதம்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நடத்துனர்கள், ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.