கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டில் சில தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் திருமண மண்டபங்களில் திருமணம், காதுகுத்து உள்ளிட்ட எவ்வித விசேஷங்களும், கூட்டங்களும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் திருமண மண்டபங்களில் 50 சதவீத நபர்களுடன் நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்ற அறிவிப்பு வெளியானது. எனினும் மாவட்ட நிர்வாகம் இதற்கு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.
இந்நிலையில், திருமண மண்டபங்களில் அரசு அனுமதித்த அளவில் 50 சதவீத நபர்கள் கலந்துகொள்ள அனுமதி அளிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருவோருக்கான இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு லட்சத்திற்கு மேல் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு பந்தல், ஒலி, ஒளி அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்க உறுப்பினர்கள், தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தபால் அனுப்பினர்.