ETV Bharat / city

ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை!

author img

By

Published : Nov 6, 2020, 3:55 PM IST

Updated : Nov 6, 2020, 6:22 PM IST

திருச்சியில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

trichy policemen suicide  Policeman hanged himself in Trichy  Policeman hanged  ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை  காவலர் தற்கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி, நத்தமாங்குடி பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (26). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு காவல் துறையில் காவலராக பணியில் சேர்ந்தார்.

திருச்சி மாநகர ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். உடல்நிலை சரியில்லை எனக் கூறி கடந்த 10 நாள்களாக இவர் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில் வியாழக்கிழமை (நவ.5) அவர் பணிக்கு வரவேண்டும். ஆனால் அவர் பணிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக காவலர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் நவநீதகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இது குறித்து தகவலறிந்த கே.கே. நகர் காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நவநீதகிருஷ்ணனின் சொந்த ஊரில் சொத்து பிரச்னை இருந்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் நவநீதகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற ரீதியில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எண்ணத்தை கைவிடுக!

திருச்சியில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: முகக் கவசம் அணியவில்லை: கேள்வி கேட்ட காவலரை காரில் இழுத்துச் சென்றவர் கைது!

Last Updated : Nov 6, 2020, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.