ETV Bharat / city

பள்ளிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

திருச்சி: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது
author img

By

Published : Jun 16, 2019, 11:22 PM IST

தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் சங்கம் தலைவர் மகேந்திரன் வலியுறுத்தல்

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலத் தலைவர் மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வெப்பத்தின் தாக்குதலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவையை 100 சதவீதம் அரசு உறுதி செய்ய வேண்டும். அதைத்பூர்த்தி செய்யமுடியாத அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கை மற்றும் வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். தற்போது உள்ள ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். 2004-2006ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் இருமொழி திட்டமே தொடர வேண்டும்” என மகேந்திரன் வலியுறுத்தினார்.

Intro:தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது

Body:திருச்சி: அரசு பள்ளிகளில் 100 சதவீத குடிநீர் தேவையை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் மகேந்திரன் கூறினார்.
தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. மாநில தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில தலைவர் மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வெப்பத்தின் தாக்குதலை கருத்தில் கொண்டு அனைத்து அரசு பள்ளிகளிலும் குடிநீர் உள்பட அடிப்படை தேவைகளுக்கான தண்ணீர் தேவையை ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்து இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைக்கான தண்ணீர் தேவையை 100% அரசு உறுதி செய்ய வேண்டும். குடிநீர் தேவையை பூர்த்தி செய்யமுடியாத அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்.
கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கை மற்றும் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 2004-2006 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டத்தை ரத்து செய்து, இருமொழிக் கொள்கையை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Conclusion:புதிய கல்விக் கொள்கையில் இருமொழி திட்டமே தொடர வேண்டும் என்று மகேந்திரன் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.