திருச்சி: உலக வன தினத்தை முன்னிட்டு திருச்சி என்ஐடியில், இயக்குநர் மினி ஷாஜி தாமஸ், பதிவாளர் பொறுப்பாளர் அறிவழகன் முன்னிலையில் 'மியாவாக்கி' வனத் தோட்டம் சிறப்பாக தொடங்கப்பட்டது.
'மியாவாக்கி' என்பது ஜப்பானிய தாவரவியலாளர் அகிரா மியாவாகி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டமானது நகர்ப்புற பசுமைக்கும் காடு வளர்ப்புக்கும் முன்னோடியாகக் கொண்ட ஒரு நுட்பமாகும். 0.58 ஏக்கர் பரப்பளவு கொண்ட மியாவாகி காட்டில் 60-70 பூர்வீக தாவரங்கள், 10-20 மூலிகை வகைகள், பழங்கள், பூக்கும் மரக்கன்றுகள் உள்ளன. இதுதொடர்பாக இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் பேசியதாவது:
மரங்கள் வளாகத்தின் பசுமையை மேம்படுத்தவும், பல்லுயிர் தன்மையை பாதுகாக்கும் என்றும், இதுபோன்ற பல மியாவாகி காடுகள் எதிர்க்காலங்களில் வளாகத்தில் பல்வேறு பகுதிகளில் திட்டமிடப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த காடுகள் வளாகத்தின் பசுமை மையங்களாக செயல்படும்.
வளாகத்தில் வசிப்பவர்கள் இயற்கையான நடைப்பயணத்தை அனுபவிப்பதற்காக காடுகளுக்குள் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தோட்டத்திற்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக, ஹெச்.ஏ.சி (HAC) உறுப்பினர்கள் ஸ்ரீரங்கத்தில் திருச்சி மாநகராட்சியால் பராமரிக்கப்படும் மியாவாகி வனப்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.
வளாகத்திலிருந்து சேகரிக்கப்பட்ட உலர்ந்த இலைகளின் அடுக்குகள், திருச்சி மாநகராட்சி நன்கொடையாக 84 டன் உரம், நிறுவனத்தின் சொந்த உரம் முற்றத்திலிருந்து மேலும் 20 டன் உரம் ஆகியவற்றைக் கொண்டு தோட்ட தள மண் போடப்பட்டது.
இந்தத் திட்டத்திற்காக முன்னாள் மாணவர்கள் நிதியளித்தனர். 4 நாட்களில் 4,000 மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வளாக குடியிருப்பாளர்கள், ஆசிரியர், ஊழியர்கள், மாணவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுகவையும் மீட்டெடுக்கப்போவதுஸ்டாலின்தான் – ஆசிரியர் கி.வீரமணி