திருச்சி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் பொது தேர்வில் முதலிடம் பெற்ற பெற்ற மாணவ மாணவிகளுக்கும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்களையும் உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது அவர், "புதிய கல்விக் கொள்கைகளுக்கு எதிராக சட்டசபையில் முதலில் பேசியது நான் தான். அதற்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்ட அகஸ்த்தியா நிறுவனத்தின் அறிக்கை வாபஸ் பெறப்படும். திருச்சி மாவட்டத்தில் 54 அரசு பள்ளிகள் 10 வகுப்பு பொதுத்தேர்விலும் , 13 பள்ளிகள் ப்ளஸ் 2 தேர்விலும் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழகத்தில் மைக்ரோபயாலஜி படத்தில் ஒரே ஒரு் மாணவி நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றிருப்பது பெருமைக்குரியது.
இவரைப் போன்ற திறமைசாலிகள் திருச்சியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உருவாகி வரவேண்டும் அதற்காக திருச்சி மாவட்ட கலெக்டர், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை ஊக்கப்படுத்தி வருகிறார் இது போன்ற நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்தி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு 6 லட்சத்திற்கு மேல் மாணவர் சேர்க்கை இருந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை அரசு பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன ஜூலை மாதம் முழுமையான எண்ணிக்கை விவரம் தெரியவரும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது
தற்போது கல்வித்துறை அதிகாரிகளை கொண்டு, அரசு பள்ளிகளின் பாடத்திட்டங்களின்படி கல்வித்தரத்தை மேம்படுத்த, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. வரும் 2025ம் ஆண்டில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் அடிப்படை தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்றவற்றை தெரிந்து கொள்வதில், மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும்.
தமிழகம் முழுவதும் பாழடைந்த இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டடங்களில் மாணவர்களை வைத்து பாடம் நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பாழடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
பள்ளி கட்டிடங்களை சீரமைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட கலெக்டர்கள் மூலம் அந்தந்த பள்ளிநிர்வாகத்திடம் இருக்கும் நிதி ஆதாரங்களைக் கொண்டு வகுப்பறை மற்றும் கழிப்பறை கட்டிடங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அரசு நிதியும் கிடைக்க கிடைக்க பள்ளி கட்டிடங்கள் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்" இவ்வாறு தெரிவித்தார்
இதையும் படிங்க: கல்லூரி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்படும்' - அமைச்சர் பொன்முடி!