திருப்பூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளால், சாலைகள் தோண்டப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு நடைபெற்றுவரும் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், பல்வேறு சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.
இந்நிலையில், மழையும் பெய்து வரும் சூழ்நிலையில், தெரு விளக்குகளும் பழுதடைந்து ஏராளமான விபத்துகள் ஏற்பட்டு பலரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, இந்த பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைவாக முடித்து, சாலைகளை சீரமைக்க வேண்டும், தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடுவம்பாளையம் பகுதி பொது மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கை, கால்களில் கட்டுப்போட்டு வந்து நூதன முறையில் மனு அளித்தனர்.