திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என மொத்தமாக 14,436 பேருக்கு திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
சில மாநிலங்களில் கரோனா பரவல் சற்று அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் இரண்டாவது அலை வருவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு.
தமிழகத்தை பொருத்தவரை 3 லட்சத்து 59 ஆயிரம் முன்களப்பணியாளர்கள் நேற்று வரை தடுப்பூசிகளை போட்டுள்ளனர். பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். ஒப்புதல் கிடைத்தவுடன் தடுப்பூசிகள் போடப்படும்” என்றார். இந்நிகழ்வில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோர் 1,623 பேர்!