ETV Bharat / city

'சிறுபான்மை அமைப்புகளை தேச விரோத சக்திகளாக சித்திரிக்கும் என்ஐஏ!'

திருச்சி: தேசிய புலனாய்வு முகமை சிறுபான்மை சமூக அமைப்புகளை தேச விரோத சக்திகளாக சித்திரிப்பதற்கான வேலைகளில் ஈடுபடுவதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் குற்றம்சாட்டியுள்ளார்.

எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழு கூட்டம்
author img

By

Published : May 4, 2019, 4:58 PM IST

திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, மாநில பொதுச் செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது, உமர் ஃபாரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செயற்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்,

"தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அடுத்து நடைபெறும் நான்கு சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலிலும் எஸ்டிபிஐ -அமமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும்.

சிறுபான்மை சமூக அமைப்புகளை தேச விரோத சக்திகளாக சித்திரிப்பதற்கான வேலைகளில் தேசிய புலனாய்வு முகமை ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் சமீபத்திய செயல்பாடுகள் இதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கை சிபிசிஐடி காவல் துறையினரிடம் இருந்து பாஜகவின் அழுத்தம் காரணமாகவே தேசிய புலனாய்வு முகமை வலுக்கட்டாயமாக பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து திருச்சி கும்பகோணம், தஞ்சை, காரைக்கால் ஆகிய இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சோதனை சிறுபான்மை அமைப்புகள் மீதான மக்களின் நல்லெண்ணத்தை குலைக்கும் வகையில் உள்ளது.

எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழு கூட்டம்

அதிமுகவைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களின் தகுதி நீக்க கோரிக்கையை சபாநாயகர் ஏற்கக் கூடாது. மே 23ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் அதிமுக அரசுக்கு பாதகமாக இருக்கும் என்பதால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கவே மூன்று எம்எல்ஏக்களின் பதவியை பறித்து, சபை எண்ணிக்கையை குறைத்து 116 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது" எனக் கூறினார்.

Intro:எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Body:திருச்சி:
எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, மாநில பொதுச் செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது, உமர் பாரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தலிலும் எஸ்டிபிஐ -அமமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். மேலும் அடுத்து நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் இக்கூட்டணி அமோக வெற்றி பெறும். எங்களது கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி. தேர்தலுக்குப் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். சிறுபான்மை சமூக அமைப்புகளை தேச விரோத சக்திகளாக சித்தரிப்பதற்கான வேலைகளில் தேசிய புலனாய்வு முகமை ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் சமீபத்திய செயல்பாடுகள் இதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. ஆட்சியாளர்களின் பிரச்சாரங்களுக்கு தகுந்தவாறு தனது விசாரணையை மாற்றி அமைத்துக்கொள்ளும் சிபிஐ போல, தேசிய புலனாய்வு அமைப்பு ஆளும் அரசின் கூண்டுக்கிளியாக மாறுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸாரிடம் இருந்து பாஜகவின் அழுத்தம் காரணமாகவே தேசிய புலனாய்வு அமைப்பு வலுக்கட்டாயமாக பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து திருச்சி கும்பகோணம், தஞ்சை, காரைக்கால் ஆகிய இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் சோதனை நடத்தியுள்ளனர். இது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனை சிறுபான்மை அமைப்புகள் மீதான மக்களின் நல்லெண்ணத்தை குலைக்கும் வகையில் உள்ளது. இந்த சோதனையில் உள்நோக்கம் உள்ளது.
அதிமுகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க கோரிக்கையை சபாநாயகர் ஏற்கக்கூடாது. மே 23ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் அதிமுக அரசுக்கு பாதகமாக இருக்கும் என்பதால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கவே மூன்று எம்எல்ஏக்களின் பதவியை பறித்து சபை எண்ணிக்கை 23 ஆக குறைத்து 116 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. இலங்கையில் பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு வாரத்திற்கு முன்பே பயங்கரவாதத் தாக்குதல் குறித்த எச்சரிக்கையை விடுக்கப்பட்ட நிலையில் இலங்கை அரசின் அலட்சியம் பல கேள்விகளை எழுப்புகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதலை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். வரும் ஜூன் 21ஆம் தேதி எஸ்டிபிஐ கட்சியின் முப்பெரும் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. ரமலான் பண்டிகை நோன்பு தொடங்க உள்ள நிலையில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் பச்சரிசி வழங்கப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது இதற்கான அரசு உத்தரவு இன்னும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது அதனால் உடனடியாக அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் போராட்டத்தில் குதிப்போம் என்றார்.

Conclusion:3 அதிமுக எம்எல்ஏக்களின் தகுதி நீக்க கோரிக்கையை சபாநாயகர் ஏற்கக்கூடாது என்று நெல்லை முபாரக் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.