ETV Bharat / city

’வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது திமுகவுக்கு நம்பிக்கை இல்லை’

திருச்சி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது திமுகவுக்கு நம்பிக்கை இல்லை என அக்கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

nehru
nehru
author img

By

Published : Dec 1, 2020, 7:28 PM IST

திமுக சட்டத்துறையின் மேற்கு மற்றும் மத்திய மண்டல வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, நிர்வாகிகளிடையே உரையாற்றினார். அப்போது, ” வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் 2,500 வழக்கறிஞர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நமக்கு நம்பிக்கை இல்லை. அதனால் தேர்தலின் போது பதிவாகும் ஒவ்வொரு வாக்கையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அனைத்து வாக்குகளையும் கணக்கிட வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானால் மாற்று இயந்திரம் பயன்படுத்தும் போது பதிவான வாக்குகளை துல்லியமாக கணக்கிட வேண்டும். கடந்த முறை தேர்தலின்போது உபரியாக 500 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வந்து இருப்பு வைத்தனர். அதில் என்ன இருந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.

அதேபோல் கடந்த தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் சுமார் 15 முதல் 16 ஆயிரம் வாக்குகள் வரை வித்தியாசங்கள் இருந்தன. ஆகையால் வழக்கறிஞர்கள் விழிப்புடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் ” என்றார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட திமுக முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கோவில்பட்டி அருகே துளசி மாடத்தை அகற்ற பாஜக, இந்து முன்னணியினர் எதிர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.