ETV Bharat / city

திருச்சியில் 'மியாவாக்கி காடு' உருவாக்கும் முயற்சியில் மேயர் - :திமுக ஓராண்டு நிறைவு

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஓராண்டு நிறைவு செய்ததை முன்னிட்டு திருச்சி மாநகராட்சியில் 'மியாவாக்கி காடு' உருவாக்கும் பணி தொடங்கப்பட்டது

திருச்சி மேயர்!
திருச்சி மேயர்!
author img

By

Published : May 7, 2022, 8:29 PM IST

திருச்சி: தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு இன்று (மே 07) திருச்சி மாநகராட்சி சார்பில் குழுமணி சாலையில் உள்ள கோவிந்தசாமி கவுண்டர் நகர் பூங்காவில் 17,632 சதுரஅடி பரப்பளவில் 'மியாவாக்கி அடர்வனக்காடு' உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

மரக் கன்று நடும் விழா
அதேபோல மாநகராட்சியில் உள்ள வின்ஸ் அன்பு அவென்யூ பூங்கா, கணபதி நகர் பூங்கா, சுப்பிரமணிய நகர் பூங்கா, பாத்திமா நகர்-அம்மன்நகர் பூங்கா, கணபதி நகர் பூங்கா, நட்சத்திர நகர், பேஸ் 2 பூங்கா ஆகிய 7 இடங்களில் 1 லட்சத்து 24 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் அடர்வனம் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்படஉள்ளது. இதில், புங்கன், வேம்பு, நாவல், இலுப்பை, நீர்மருது, பாதாம், இச்சி உள்ளிட்ட 24 வகை 3,000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு விடியல் வந்ததா ? நீட் முதல் திராவிட மாடல் வரை என்ன செய்தார் ஸ்டாலின்...?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.