ETV Bharat / city

விலையில்லா மடிக்கணினிகளுக்கு இலவச இணைய இணைப்பு கிடைக்குமா? அமைச்சர் உதயகுமார் பதில். - தமிழ்நெட்

திருச்சி: "திருச்சி இ-கனெக்ட் 2019" என்ற பெயரில் நடைபெற்ற கருத்தரங்கில், தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள விலையில்லா மடிக்கணினிகளுக்கு இலவச இணைய இணைப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் பதிலளித்துள்ளார்.

Minister Udhayakumar Trichy e connect
author img

By

Published : Sep 26, 2019, 6:06 PM IST

இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில், திருச்சியைத் தகவல் தொழில்நுட்ப உலகத்தோடு இணைக்கும் வகையில் "திருச்சி இ-கனெக்ட் 2019" என்ற பெயரில் திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்தியத் தொழில் கூட்டமைப்பின் திருச்சி மண்டலத் தலைவர் சையது ஆரிஃப் இந்தக் கருத்தரங்கத்தில் வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கத்தின் நோக்கம் குறித்து சிஐஐ-இன் முன்னாள் தலைவர் லியோ ஆனந்த் பேசினார். மேலும் கருத்தரங்கத்தில் தமிழ்நாடு மின்னணுக் கழக நிர்வாக இயக்குனர் விஜயகுமார், தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலர் சந்தோஷ் பாபு ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கருத்தரங்கில் முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, சிவபதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரத்தினவேல், குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Minister Udhayakumar at TRichy e connect

வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இந்தக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், ”சென்னையைத் தொடர்ந்து திருச்சியில் "இ-கனெக்ட்" குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. காகிதம் இல்லாத மின்னணு நிர்வாகத்தை உருவாக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு செயலாற்றிவருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையைப் பொருத்தவரை அதற்கென்று எல்லை எதுவும் கிடையாது. அதேபோல் நாம் இப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் எங்கே இருக்கிறோம் என்பதையும் சொல்லமுடியாது. தகவல் தொழில்நுட்பத் துறையின் உதவி இல்லாமல் நாட்டின் பிற துறைகள் இங்கே சாதனை படைக்க முடியாது. மழை, வெள்ளம் போன்ற பேரிடரை முன்கூட்டியே அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தகவல் தொழில்நுட்பத்துறை பெரும் உதவி செய்து வருகிறது.

நமது நாட்டில், 14 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, மொத்தம் 8,800 கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டுவந்து, 50,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்த ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான். முதலமைச்சர் இந்தப் பயணத்தில் வெற்றி பெற்றதால்தான் விமர்சனங்களை தைரியமாய் எதிர்கொள்கிறோம். ஏற்கனவே நடந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம், தகவல் தொழில்நுட்பத் துறையில் 11,974 கோடி ரூபாய் முதலீடு கொண்டு வரப்பட்டுள்ளது. உலக அளவிலுள்ள முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50% பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்குத் தமிழ்நாடிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில்தான் தமிழ்நாடுஅரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று பேசினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள், விரைந்துத் தொழிலை தொடங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். அதோடு புதிதாகத் தொழில் தொடங்க முன்வருவோருக்கு தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களில் இட ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மாவட்டந்தோறும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை வளர்ச்சிபெறச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகையில், திருச்சியில் இந்தியத் தொழில் கூட்டமைப்புடன் தமிழக அரசும், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறையும் இணைந்து தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய முடிவு செய்துள்ளது.

கலந்தாய்வு முறையில் அவர்களுக்கு அனுமதி வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காகத்தான் தற்போது திருச்சியில் 'இ- கனெக்ட்’ என்கின்ற இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பேரிடர் செயலியை பலர் பதிவிறக்கம் செய்து பலரும் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் பருவகால எச்சரிக்கைகளையும், பேரிடர் வரைபடங்களையும் பார்த்து அறிந்து கொள்ளலாம். அதேபோல் மழைக்காலங்களில் பள்ளி, கல்லூரிகள் உண்டா, இல்லையா என்பதையும் இந்தச் செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம்” என்றும் கூறினார்.

தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள விலையில்லா மடிக்கணினிகளுக்கு இலவச இணைய இணைப்பு கிடைக்குமா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "500 கோடி ரூபாய் முதலீட்டில் 'தமிழ்நெட்’ எனப்படும் திட்டம் தற்போதுத் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து வீடுகளுக்கும் இணைய இணைப்பை வழங்க, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சிகளை ஆப்டிக்கல் பைபர் கேபிள் மூலம் இணைக்க முதல்கட்டமாக 1,800 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டவுடன் அனைத்து அரசு நலத் திட்டங்களையும் வீட்டிலிருந்தே பெறக்கூடிய நிலை உருவாகும். தமிழ்நாடு அரசு சார்பில் 55 லட்சம் முதல் 60 லட்சம் வரையிலான விலையில்லா மடிக்கணினிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த மடிக்கணினிகளுக்கு இலவச இணைய இணைப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவு செய்து அறிவிப்பார்” என்று பதிலளித்தார்.

Intro:இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் திருச்சியை தகவல் தொழில்நுட்ப உலகத்தோடு இணைக்கும் வகையில் "திருச்சி இ-கனெக்ட் 2019" என்ற கருத்தரங்கம் நடந்தது.

Body:திருச்சி:
தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள விலையில்லா மடிக்கணினிகளுக்கு இலவச இணைய இணைப்பு கிடைக்குமா? என்ற கேள்விக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதிலளித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் திருச்சியை தகவல் தொழில்நுட்ப உலகத்தோடு இணைக்கும் வகையில் "திருச்சி இ-கனெக்ட் 2019" என்ற கருத்தரங்கம் திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது.
சிஐஐ திருச்சி மண்டல தலைவர் சையது ஆரிப் வரவேற்றார். திட்டத்தின் நோக்கம் குறித்து முன்னாள் தலைவர் லியோ ஆனந்த் பேசினார்.
விழாவில் தமிழ்நாடு மின்னணு கழக நிர்வாக இயக்குனர் விஜயகுமார், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளர் சந்தோஷ் பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில்,
சென்னையை தொடர்ந்து திருச்சியில் "இ-கனெக்ட்" குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. காகிதம் இல்லாத மின்னணு நிர்வாகத்தை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையைப் பொருத்தவரை அதற்கென்று எல்லை கிடையாது. அதேபோல் நாம் இப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் எங்கே இருக்கிறோம் என்பதையும் கூறமுடியாது. தகவல் தொழில்நுட்பத் துறையின் உதவி இல்லாமல் எந்த துறையும் சாதனை படைக்க முடியாது. மழை, வெள்ளம் போன்ற பேரிடரை முன்கூட்டியே அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தகவல் தொழில்நுட்பத் துறை பெரும் உதவி செய்து வருகிறது.
14 நாட்களில் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, 8,800 கோடி ரூபாய் முதலீட்டை கொண்டு வந்து 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தந்த ஒரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். வேறு யாரும் இதுபோன்று செய்தது கிடையாது. இந்த பயணத்தின் மூலம் வெற்றி பெற்றதால் தான் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே நடந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தகவல் தொழில்நுட்ப துறையில் 11,974 கோடி ரூபாய் முதலீடு கொண்டு வரப்பட்டுள்ளது. உலக அளவில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 50% பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தமிழகத்திலேயே வேலை வாய்ப்பை உருவாக்கித்தரும் வகையில் தான் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றார்.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, சிவபதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரத்தினவேல், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிறுவனங்கள் விரைந்து தொழிலை தொடங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். அதோடு புதிதாக தொழில் தொடங்க முன் வருவோருக்கு தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் இட ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் தோறும் தகவல் தொழில்நுட்ப பூங்காவை வளர்ச்சி அடைய செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் திருச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்புடன், தமிழக அரசும், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையும் இணைந்து தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒற்றை சாளர முறையில் அவர்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தான் தற்போது திருச்சியில் இ- கனெக்ட் என்ற கருத்தரங்கம் நடைபெறுகிறது. தமிழக அரசு சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பேரிடர் செயலியை பலர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பருவகால எச்சரிக்கைகளையும், பேரிடர் வரைபடங்களையும் பார்த்து அறிந்து கொள்ளலாம். அதேபோல் மழைக்காலங்களில் பள்ளி, கல்லூரிகள் உண்டா? இல்லையா? என்பதையும் இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் 500 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நெட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து வீடுகளுக்கும் இணைய இணைப்பை வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சிகளை ஆப்டிக்கல் பைபர் கேபிள் மூலம் இணைக்க முதல்கட்டமாக ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து உள்ளார். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட உடன் அனைத்து அரசு நலத் திட்டங்களையும் வீட்டிலிருந்தே பெறக்கூடிய நிலை உருவாகும். தமிழக அரசு சார்பில் 55 லட்சம் முதல் 60 லட்சம் வரையிலான விலையில்லா மடிக்கணினிகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கணினிகளுக்கு இலவச இணைய இணைப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவு செய்து அறிவிப்பார் என்றார்.

Conclusion:அனைத்து ஊராட்சிகளிலும் ஆப்டிக்கல் பைபர் கேபிள் மூலம் இணைய இணைப்பு கொடுக்க 1,800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.