ETV Bharat / city

10 லட்சம் சம்பளத்தை உதறி இயற்கை விவசாயத்தில் தூள்கிளப்பும் பொறியாளர் - இயற்கை விவசாயம்

திருவாரூர்: வெளிநாட்டில் மாதம் 10 லட்சம் ரூபாய் அளவிற்கு சம்பளம் பெற்றுவந்த மென்பொறியாளர் ஒருவர் இயற்கை விவசாயத்தின் மீதுள்ள பற்றினால் சொந்த ஊர் திரும்பி இயற்கை விவசாயி ஆகியிருக்கிறார். அவரைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு.

farming
farming
author img

By

Published : Feb 18, 2020, 6:47 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள முகந்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபி அசோக். இயற்கை வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் மீது கொண்ட பற்றினால் இவர் தனது 20 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுவரும் இவர், தன்னுடைய நிலத்தில், மா, கொய்யா, நெல்லி, வாழை, தென்னை போன்ற பலவகை மரங்களையும் அகத்திக்கீரை, ஓமவள்ளி, கற்றாழை, பெரியாநங்கை, சிறியாநங்கை, திருநீற்று பச்சிலை, தூதுவளை, துளசி போன்ற மூலிகைகளையும் சாகுபடி செய்துவருகிறார்.

இதுமட்டுமல்லாமல் வீட்டுத் தோட்டத்தில் மாட்டுச் சாணம், வேப்பங்கொட்டை உரம், மண்புழு உரம், போன்றவற்றை இட்டு கத்தரி, வெண்டை, அவரை, கொத்தவரை போன்ற காய்களையும் இயற்கை முறையிலேயே வளர்த்துவருகிறார் வெளிநாட்டில் 10 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு இயற்கைக்கு திரும்பிய இந்த மென்பொறியாளர் விவசாயி.

(ஜானகி பேட்டி)

பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த மறைந்த நெல் ஜெயராமனின் அறிவுரையின்படி கிச்சளி சம்பா, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, கருப்பு கவுணி, பொன்னி போன்ற பாரம்பரிய நெல் வகைகளையும் சபி அசோக் பயிரிட்டு அறுவடை செய்துவருகிறார்.

யூரியா, பொட்டாசியம் போன்ற பூச்சிக்கொல்லி உரங்களைப் பயன்படுத்தி விவசாய நிலம் மட்டுமல்லாது உடலையும் கெடுத்துக்கொண்டிருக்கும் நிலைமாறி, முன்னோரின் பாரம்பரிய இயற்கை விவசாய முறையை மீட்டெடுக்க வேண்டுமென்று கூறும் சபி, இளைஞர்கள் இயற்கை உழவுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அழைப்புவிடுக்கிறார்.

(சபி அசோக் பேட்டி)

இயற்கை விவசாயத்தை தான் மட்டும் செய்யாமல் அது பற்றிய விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் பள்ளி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சபி அசோக் பரப்பிவருகிறார்.

மேலும், இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பலர் இயற்கை முறையிலான விவசாயத்திற்கு மாறி, சாகுபடி செய்துவருகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.

இதையும் படிங்க: நச்சுத்தன்மை கொண்ட பார்த்தீனியச் செடியை ஒழிப்பது எப்படி?தெரிஞ்சுக்கங்க

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.