ETV Bharat / city

மேகதாது அணை விவகாரம் - தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் போராட்டம் - தன்னாட்சி அதிகாரம்

கர்நாடகாவிற்கு ஆதரவாக அணை கட்ட துணைபோகும் மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் அடிபணியக்கூடாது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

mannargudi farmers block flags protest
mannargudi farmers block flags protest
author img

By

Published : Jun 21, 2021, 3:03 PM IST

Updated : Jun 21, 2021, 3:11 PM IST

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகா மற்றும் காவிரி மேலாண்மை வாரியத் தலைவரை கண்டித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னார்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, "கர்நாடகம் சட்டவிரோதமாக மேகதாது அணை கட்ட முயற்சி எடுக்கிறது. மறைமுகமாக மத்திய அரசும், பிரதமரும் துணை போகிறார்கள். மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆணையத் தலைவர் அடிபணியக்கூடாது.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் போராட்டம்

ஓராண்டு காலமாக ஆணையம் முடங்கி இருக்கிறது.குறிப்பாக கர்நாடகமும் மத்திய அரசும் கூட்டு சேர்ந்து ஆணையத்தின் செயல்பாடுகளை அதிகாரத்தை பறிக்க மறைமுக முயற்சியில் ஈடுபடுகிறது. இதற்கு ஆணையத் தலைவர் இடமளிக்கக்கூடாது.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையம் முழு செயல்பாட்டுக்கு வரவேண்டும்.
தற்போது தமிழகத்தில் கருகும் பயிரை காப்பாற்ற மாதாந்திர அடிப்படையில் வர வேண்டிய தண்ணீரையும், ஜூன் மாதத்திற்கான ஒதுக்கீட்டையும் உடனடியாக பெற்றுத் தர ஆணையம் முன்வர வேண்டும்.

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது சட்டவிரோதம் என நாளை நடைபெற உள்ள ஆணையக் கூட்டத்தில் அறிவிக்க முன் வர வேண்டும். அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் வழக்கு தொடர முன்வர வேண்டும். இல்லையென்றால் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர்வோம். கடந்த காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு காவிரி பிரச்சனையில் பிரதமரை சார்ந்து தனது அணுகுமுறைகளை பின்பற்றியதால் ஆணையம் முடக்கப்பட்டது.

தற்போது ஸ்டாலின் தலைமையிலான அரசு அதற்கு இடமளிக்கக்கூடாது. பிரதமரோ, மத்திய நீர்வளத்துறை அமைச்சகமோ காவிரி மேலாண்மை ஆணையத்தின் நடவடிக்கைகளில் நுழைய அனுமதிக்கக் கூடாது.

தன்னாட்சி அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய ஆணையம்தான் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு என்பதை உணர்ந்து, ஆணையத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

இதையும் படிங்க :கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் - முக்கியத்துவமான ஆளுநர் உரை

Last Updated : Jun 21, 2021, 3:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.