ETV Bharat / city

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு; குற்றவாளிகளுக்கு அக்.18 வரை சிறை - Trichy

திருச்சி: லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் பிடிபட்ட திருவாரூர் மணிகண்டன், தப்பி ஓடிய சுரேஷின் தாயாரையும் வரும் 18ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

Laitha Jewelry Theft Accused Remand in Jail
author img

By

Published : Oct 6, 2019, 7:53 AM IST

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 2ஆம் தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் சுவரைத் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர். இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுப்பட்ட அடையாளம் தெரியாத நபர்களைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இது தவிரத் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருவாரூரில் காவல் துறையினர் வாகன சோதனைக்காக ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தியபோது. அதில் வந்த இரண்டு நபர்கள் தப்பியோடினர். இதைத் தொடர்ந்து அவர்களை விரட்டிச் சென்ற காவல் துறையினர் இருவரில் ஒருவரைப் பிடித்தனர்.

Laitha Jewelry Theft Accused Remand in Jail
குற்றவாளிகள் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது

பிடிபட்ட அந்த நபர் திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த நகையைப் பையில் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 4.5 கிலோ எடையுள்ள தங்க நகைகளைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றொரு குற்றவாளியான சுரேஷ் என்பவரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். சுரேஷுக்கு அவரது தாயார் கமலவல்லி உடந்தையாக இருந்தது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மணிகண்டனிடமும், சுரேஷின் தாயாரிடமும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று நீதிமன்றம் விடுமுறை என்பதால் திருச்சி காஜாமலை அருகே உள்ள மாஜிஸ்திரேட் வீட்டில் நீதிபதி திரிவேணி முன்னிலையில் குற்றவாளிகள் இருவரையும் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர்.

18ஆம் தேதி வரை சிறை -மாஜிஸ்திரேட் உத்தரவு

அப்போது நீதிபதி வரும் 18ஆம் தேதி வரை இருவரையும் சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டனை திருச்சி மத்தியச் சிறையிலும், சுரேஷின் தாயாரைக் காந்தி மார்க்கெட் அருகே உள்ள மகளிர் சிறையிலும் காவல் துறையினர் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபல கொள்ளையன் முருகன் உள்ளிட்டோரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரி கொள்ளையர்களைத் துரத்திப் பிடித்த போலீஸ்: வெளியான சிசிடிவி வீடியோ!

Intro:லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் பிடிபட்ட மணிகண்டன் மற்றும் தப்பியோடிய சுரேஷின் தாயாரையும் வரும் 18ம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

Body:திருச்சி:
லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் பிடிபட்ட திருவாரூர் மணிகண்டன் மற்றும் தப்பி ஓடிய சுரேஷின் தாயாரையும் வரும் 18ம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜூவல்லரி நகை கடையில் கடந்த 2ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் சுவரை துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், வைரம், பிளாட்டினம் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். மர்ம நபர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இது தவிர தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவாரூரில் வாகன சோதனைக்காக போலீசார் ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது அதில் வந்த நபர்கள் தப்பி ஓடினர்.
இருவரில் ஒருவரை போலீசார் விரட்டி சென்று பிடித்த போது அவர் திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த நகையை பையில் வைத்திருந்ததும் தெரியவந்தது.
அவரிடமிருந்து 4.5 கிலோ எடையுள்ள தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு குற்றவாளியான சுரேஷ் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுரேஷுக்கு அவரது தாயார் கமலவல்லி உடந்தையாக இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டனிடமும், சுரேஷ் தாயாரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று மாலை திருச்சி இரண்டாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் திரிவேணி முன்னிலையில் இருவரையும் போலீசார் ஆஜர்படுத்தினர்.
இன்று நீதிமன்றம் விடுமுறை என்பதால் திருச்சி காஜாமலை அருகே உள்ள மாஜிஸ்திரேட்டு வீட்டில் போலீசார் இருவரையும் ஆஜர்படுத்தினர்.
வரும் 18ம் தேதி வரை இருவரையும் சிறையிலடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் போலீசார் அழைத்துச் சென்று மணிகண்டனை திருச்சி மத்திய சிறையிலும், சுரேஷின் தாயாரை காந்தி மார்க்கெட் அருகே உள்ள மகளிர் சிறையிலும் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபல கொள்ளையன் முருகன் உள்ளிட்டோரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Conclusion:இன்று நீதிமன்றம் விடுமுறை என்பதால் காஜாமலை அருகே உள்ள மதிப்பீட்டின் வீட்டில் இருவரையும் போலீசார் ஆஜர்படுத்தினர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.