ETV Bharat / city

திருச்சியில் 230 பேருக்கு டெங்கு அறிகுறி: மாவட்ட ஆட்சியர் பகீர் தகவல் - திருச்சி மாவட்ட ஆட்சியர்'

திருச்சி: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இக்காய்ச்சல் அறிகுறி திருச்சி மாவட்டத்தில் 230 பேருக்கு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறினார்.

Trichy Collector
author img

By

Published : Oct 19, 2019, 5:23 PM IST

திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என்று தனித்துவமான வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.

இங்கு உள் நோயாளிகளாகவும் புற நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் இந்தக் காய்ச்சல் வார்டை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருக்கு மருத்துவமனை முதல்வர் அர்ஷியா பேகம் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து விளக்கிக் கூறினார்.

அப்போது ஆட்சியர் சிவராசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2018ஆம் ஆண்டு திருச்சியில் 253 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு கடந்த 15ஆம் தேதிவரை 230 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 தினங்களில் மட்டும் 32 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சைப் பெற்றுச் சென்றுள்ளனர். இதில் நான்கு பேர் மட்டுமே தற்போது உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

வடக்கு மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் திருச்சி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளது. மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் மட்டுமே 60 முதல் 70 விழுக்காடு வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: 100க்கும் மேற்பட்டோர் அடையாளம் தெரியாத காய்ச்சலால் பாதிப்பு - பொதுமக்கள் பீதி!

டெங்கு எதிரொலி: நல்வாழ்வு மையங்கள் மருத்துவமனைகளாக தரம் உயர்வு

Intro:திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு 230 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆட்சியர் சிவராசு கூறினார். Body:திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு 230 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆட்சியர் சிவராசு கூறினார்.
திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருச்சி கி ஆ பெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என்று பிரத்தியேக வார்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இங்கு உள் நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த காய்ச்சல் வார்டை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருக்கு மருத்துவமனை டீன் அர்ஷியா பேகம் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து விளக்கிக் கூறினார்.
அப்போது ஆட்சியர் சிவராசு செய்தியாளர்களிடம் பேசுகையில், 2018ம் ஆண்டு திருச்சியில் 253 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த ஆண்டு கடந்த 15ஆம் தேதி வரை 230 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 தினங்களில் மட்டும் 32 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். இதில் 4 பேர் மட்டுமே தற்போது உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். வடக்கு மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் திருச்சி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மட்டுமே 60 முதல் 70 சதவீதம் வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.Conclusion:திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.