திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் இந்து முன்னணியில் பொறுப்பாளராக உள்ளார். நேற்று இரவு இவருடைய இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்புறம் நிறுத்திவைத்திருந்தார்.
இந்நிலையில், நள்ளிரவில் இவர் வீட்டு ஜன்னலை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து தூங்கிக்கொண்டிருந்த முரளி, அவரது குடும்பத்தார் திடீரென விழித்துப் பார்த்தபோது ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடந்தன. அதுமட்டுமின்றி அவரது இருசக்கர வாகனம் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.
இதையடுத்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் இருசக்கர வாகனம் முழுவதுமாக எரிந்து நாசமானது. இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில், மணிகண்டம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: பாஜக இளைஞரணி செயலாளரின் இருசக்கர வாகனத்திற்கு தீ