திருச்சி விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் அதிகாலை வந்தது. இதில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் மத்திய நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது கும்பகோணத்தைச் சேர்ந்த அசோகன், ராபர்ட், மன்னார்குடியை சேர்ந்த சாமிவேல் ஆகியோர் உடமைகளில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை தனியறைக்கு கொண்டு சென்று சோதனை செய்ததில் சுமார் 6.41 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 168.5 கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: நீலகிரியில் அரசுப் பேருந்தை வழிமறித்த கொம்பன்!